நோட்டா ஓட்டு
பார்த்து பார்த்து
இந்த சின்னத்தில்
தான்
நான் ஓட்டு
போடுவேன் என
ஓட்டைப் போட்டு
விட்டு -பின்பு சற்று
நின்று அதை சரி
பார்த்து செல்லும்
வாக்காளருக்கு
அவர் யாரைத்
தேர்ந்தெடுத்தாரோ
அவரே அந்த
வாக்காளரின்
முதுகில் போடுகிறார்
பட்ட நாமத்தை !!!
இதையெல்லாம்
பார்த்து நொந்த
வாக்காளனுக்கு
தன் எதிர்ப்பைத்
தெரிவிக்க வந்த
புதுச் சின்னம்தான்
நோட்டா
இதைக் கொண்டு
வந்ததால்
முன்பு ஓட்டு
போடாமல்
இருந்தவன் கூட
தற்போது
தன் வாக்கை
பதிவிடுகிறான்
தன் கடமையை
நிறைவேற்ற
நோட்டாவை
அழுத்தி
இதுவே
இப்போது நமக்கு
கிடைத்த ஆறுதல் !!!!
சென்ற முறை
வாக்கு அளித்த சதவீதம்
அதிகரிக்க நோட்டாவே
முக்கிய காரணம் !!!!
தேர்தல் ஆணையம்
இந்த நோட்டாவின்
எண்ணிக்கையைக்
கருத்தில் கொண்டு
இதன் நன்மைகள்
தீமைகளை
மக்களுக்கு -மேலும்
தெரியப்படுத்த
முனைய வேண்டும் !!!
கோல்மால் செய்யும்
கொள்ளையர்களை
நோட்டாவைக் குத்தி
விரட்டுவோம் !!!!
நல்ல தமிழகத்தை
உருவாக்குவோம் !!!!
அதுவே நம்
கடமை !!!!!!!!!!!!!!!!!!