தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்- 62

காலேஜிக்கு படிக்கப்போற கன்னிபெண்ணே
மேரேஜி பண்ணிக்கலாமா சின்னபெண்ணே
மும்தாஜி பீவியை பாத்ததுண்டா
நூர்ஜகான் பேகத்தை கண்டதுண்டா
ஷாஜகான் பேமலி இந்தியாவின் சொந்தம்தான்
சொல்லப்போனா எல்லாரும் இந்நாட்டு மன்னதான்..!

காலையில வரும்போது கவர்ச்சியாய்
மாலையில போகும்போது மகிழ்ச்சியாய்
சாலைகளை நீ கடக்கிறாய்
சந்தோஷ வானில் பறக்கிறாய்

என்னை ஏன் வீணாய் மொரைக்கிற
என் சொல்பேச்சு கேளாமல் விரைகிற
எப்படியும் நான்தான் உனக்கு மாப்புள
நிச்சயம் பண்ணப்போறேன் உன்வீட்டுல…!


உன் உருவத்தை பால்நிலவாய் ரசிக்கிறேன்
உன் பருவத்தை பங்குபோட நினைக்கிறேன்
என் இதயத்தை உனக்காக அர்பணிக்கிறேன்
உன்னை புஷ்பக விமானத்தில் அமர்த்துவேன்

இப்பவாவது நீ என்னை புரிஞ்சிக்கோ
நான் உனக்கேத்த ஜோடிதான் ஏத்துக்கோ…!
ஒருவனுக்கு ஒருத்திதான் உலகிலே – அதை
ஒழுக்கத்தோடு கடைபிடிப்பவன் நல்மனிதனே..!

எழுதியவர் : சாய்மாறன் (5-Apr-16, 8:16 am)
பார்வை : 87

மேலே