இயற்கையின் மடியில்

ஓடைக்கரையில்
மரக்கிளையில்
ஒய்யாரமாய்
பாடும் குயிலே
உன் குரலில் மயங்கி
மதியற்றுகிடக்கிறேன்...
தென்றல்பாடும் கீற்றோலியில்
கரைந்துகொண்டிருக்கிறேன்....
கரையோரம் தவளை சத்தம்
தலைமாட்டில் கவிப்பாட
கால்மாட்டில் விட்டில்கள்
உணர்வேளுப்பி துள்ளியோட
சற்றுமுணராமல்
கண்விழித்துக் கரைநோக்க
இருள்சூழ்ந்த காட்டுக்குள்ளே.....
விழித்திருந்த விழிகளுக்கு
இருள்தவிர்த்து பார்வையில்லை
ஒளியூட்டும் சுடரொளியாய்...
இருள் போக்க
மின்மினிகள் மின்சாரமில்லா
விளக்கெரிக்க
இயற்க்கையன்னையின்
மடியில் தலைவைதுறங்கும்
சிறுபிள்ளையாய் மீளாமல் இருக்கிறேன்.....

எழுதியவர் : (5-Apr-16, 9:06 am)
சேர்த்தது : கருப்பசாமி
Tanglish : iyarkaiyin madiyil
பார்வை : 443

மேலே