தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 63

தமரை குளத்துல
தங்கநிற குடத்துல
தண்ணீர மொள்ளுர தாமரை…..!
நான் தகராறு பண்ணாத ஆம்பளை!

தாரூ சுடும் ரோட்டுல
கொளுத்துர வெய்யுலுல
செருப்பின்றி நீ நடக்குற –
அதைகண்டு என்மனசு பொறக்கல;

தண்ணீ பீய்ச்சி அடிக்கிறேன்
தர்பூஸூ கொடுக்கிறேன்
தயங்காம நீ வாங்கிக்கோ
எனது தாராள மனசை ஏத்துக்கோ..!

என்னை ஏன் நீ மொறைக்கிற
ஏன் என்னை நீ வெறுக்குற
என்மனம் நினைப்பது உன்னைதான்
உன்னை மறக்க வழி என்னதான்…?

ஆலமர விழுதில் - நீ
ஊஞ்சலாடும் பொழுதில்
காதல் கொள்ள நான் வரவா
அமுழ்தூறும் தேன் தரவா…!

கம்மாங்கரை ஓரத்தில்
ஏகபோக காலத்தில்
காதல் மணி விதைக்கலாம்
காம நாத்து நட்டு பழகலாம்..!

பள்ளிகூடம் போகையில்
பள்ளிவாசால் பாதையில்
பாரிஜாதம் வீசினேன்
பாவை உன் பாதத்தில்..!

கூட்டணி தர்மம் கெடாமல்
பார்த்துக் கொள்வேன் விடாமல்
சீட்டு கட்டல்ல நம் காதல் கூட்டணி
சிதற விடாமல் காப்போம் கண்மணி..!

கற்பனை அல்ல காதல் - அது
காப்பிய உலகின் தேடல்
விற்பனை உலகில் கிடைக்காத
வித்தியாசமான மாடல்..!

பாடம் பயிலும் ராணி
என் பாதைக்கு வா நீ
காதல் என்ற பெயரில்
ஓடம் விடுவோம் இதழில்..!

அர்த்த ஜாம நேரத்தில்
யாருமற்ற தனிமையில்
கானம் பாடும் கருங்குயில்
அது யாருக்காக உண்மையில்..?

கண்கள் ரெண்டும் திராட்சை செடி
அது அழகாய் ஆடுது குச்சிபுடி
நீ பெயருக்கேத்த மலர்கொடி
உன்னை நான் கவர்வதெப்படி..?

எழுதியவர் : சாய்மாறன் (6-Apr-16, 7:21 am)
பார்வை : 242

மேலே