கடிக்குமுன் வா

வீதியெங்கும்
மழை பொழிந்து
ஈரமான தரை
யார் வீட்டின் முன்பும்
கோலம் இல்லை !

தலை விரித்து
திரண்டு கருமேகம்
அந்தியாய்
தோன்றும் வானம்
எதிரில் நீ வரின்
கோலம் தோன்றும்
மனதின் அடிவானில்
செத்துபோகும்
நிழலில்
வெளிச்சம் வரும் !

அம்பிகையே ...
செருங்கூத்து நீ புரிவாய்
நின் சுடரொளி
தேகமெங்கும்
பாய்ச்சிடும் புது வயிரம்!


தேவி..
நின்னை காண்பேனோ ?
நிறமற்றுப் போவேனோ ?
எட்டிப் பார்க்கிறது ..
அரவு ..எனையது
கடிக்குமுன் வா!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:32 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 98

மேலே