நான் உன்னை நேசிக்கிறேன்
நீ எங்கே?
என்னைவிட்டு
ஏன் வெகுதூரம் சென்றாய்?
உன்னைத் தேடும் கண்களில்
அறிமுகமில்லா முகங்கள்
வந்து வந்து செல்கின்றன!
என் கண்கள் உலர்ந்து விட்டன,
உன்னைக் காணா வருத்தத்தில்
என் இதயம் நிரம்பி வழிகிறது!
என்னுடல் மெலிந்து
ஆன்மாவும் கண்ணீரால் நனைகிறது,
எங்கிருக்கிறாய் நீ?
என்னிடம் பேசவும் பெண்ணே நீயில்லை!
என் பேச்சை கேட்கவும் நீயில்லை – நீயின்றி
நான் வாழ்வது எப்படி, அறியாய் நீ!
எப்படிச் செல்லலாம் என்னை விட்டு
எப்பொழுதும் உன்னையே எண்ணி நான்,
உன் சொல் ஒன்று போதும்!
சொல்!
’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று,
மீண்டும் உயிர் வாழ்வேன்.