யார் மக்கு - ஒரு பக்க கதை
" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்"
கிச்சனில் குக்கர் அலறியது.
ஆபிஸுக்கு லேட்டானதால் ஹாலில் அதற்குமேல் சூடாக
கத்திக்கொண்டிருந்தான்,குமரேசன் ,சுகன்யாவின் கணவன்.இவர்களின் ஒரே குழந்தை ரமேஷ்.
காலையில் எழுந்து ,குளித்து ,சமையல்செய்து கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பிவிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் சுகன்யாவிற்கு.வழக்கம்போல் இன்றும் கணவனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு குழந்தையை தயார் செய்ய தொடங்கினான்.
குழந்தையை சாப்பிடவைத்து ,கிளப்பி ஒருகையில் பிடித்து கொண்டு,மறுகையில் ஒரு பிளாஸ்டிக் கவரில் குப்பையோடு வீட்டை விட்டு வெளியேறினாள்.வாசலில் நின்றபடி கையிலிருந்த பிளாஸ்டிக் பையை வீசியேறிந்தாள்.அது "பொத்"என்று விழுந்தது,மக்கும் குப்பையில்..
"அம்மா,தப்பா போட்டுடே நா அத சரியா போடடா" என்ற ரமேஷை "போடா மக்கு" என திட்டியபடி வேகமாக வந்து நின்ற ஸ்கூல்வேனில் ஏற்றிவிட்டாள் சுகன்யா.
"யார் மக்கு?" என்ற கேள்வியோடு வேனில் ஏறினான்,ஒன்றாவது படிக்கும் குழந்தை ரமேஷ்.
- அரவிந்த்