அவனின் நாயகி

கண் எண்ணும் இந்த்ரியத்தால் மனம் தடுமாறி
பொய் மானை தங்கமான் என்றெண்ணி
ராமபிரானை அதன் பின்னே போக செய்தவள்
ராமகாவிய நாயகி சீதை.

நாக்கு என்னும் இந்த்ரியத்தால் நிலை தடுமாறி
துரியோதனனை பார்த்து எள்ளி நகையாடி
குருடன் என்றதனால் பாரத போரை
நிமித்தம் செய்தவள் பாண்டவர் நாயகி பாஞ்சாலி.

தன் கணவரை உதாசீனப்படுத்திய தந்தையையும்
அவன் சேனையையும் சின்னாபின்னமாகி
ஆதி சக்தி உருகொண்டு தானும் யாககுண்டத்தில் இறங்கி
தன் உயிர் நீத்தாள் சிவனின் நாயகி சக்தி.

சிறு வயது முதலே தன் இதயத்தில் நிறுத்தி
கண்ணனை பூஜித்து தன் காதலனாய் தோழனாய்
அவன் குழல் நாதத்தை கண் மூடி ரசிக்கும் ரசிகையாய்
என்றென்றும் அவன் நினைவில் அவன் நாயகி ராதா.

கண்ணும் வாக்கும் உடலும் உயிரும் தாண்டி
காதல் கணவனுக்கு இதயத்தை கொடுப்பவளே
அவன் நினைவிலும் அவன் வாழ்விலும்
வசந்தம் சேர்ப்பவள்; அவனின் நாயகி.

எழுதியவர் : சுபா சுந்தர் (12-Apr-16, 6:08 pm)
Tanglish : avanin naayaki
பார்வை : 194

மேலே