சில சிலர் பலர்

புற்றீசல்களுக்கிடையில்
வண்ணச் சிறகு விரித்து
ஒரு பட்டுப் பூச்சி

செந்தேள் நச்சுக் கொடுக்கு
உயர்த்தி நிற்கும் இடத்தில்
ஒரு செந்தேன் குவளை

வல்லூறுகள் வட்டமிடும்
வான் வெளியினில்
அஞ்சி நிற்கும் ஒரு சின்னப் புறா

பொய்கள் புதுப்புது
வேடமிட்டு நடிக்கும் அரசியல் மேடையில்
சத்தியத்துடன் ஒதுங்கி நிற்கும் ஒரு மனிதன்

புலம் பெயந்து புது இடத்தில்
பொழுது விடியாச் சிறையில்
சில சிலர் பலர்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-16, 9:03 am)
பார்வை : 380

மேலே