சோர்வைத் துடைத்திடும் சுமைதாங்கி சக்கரைவாசன்

சோர்வைத் துடைத்திடும் சுமைதாங்கி
********************************************************************

தேகத்துள துயர்தனை போக்கவே தினமும்
ஓராயிரம் தீர்த்தங்கள் தேடிக் குளித்தபின்
ஏகத் துடித்திடும் என்மனத் தோள்மீது
ஏறியே முன்னேறும் வாழ்வெனும் யாத்திரைச்
சோகத்து மத்தியில் சோர்வினைத் துடைக்கவோர்
சுமைதாங்கி அதுஒன்றை தேடினேன் நாடினேன் !


கழுவிய பாதம்நீட்டி முழுவதும் எனைமறந்து
தொழுதே அடிபணிந்து தூயவிழிநீர் பாய்ச்சி
ஒழுகிடும் துன்பங்கள் முழுவதும் திறந்துகூறி
அழுது புலம்பிடவே ஆலயத்துளே வந்தேன் !


கூறிடும் வகைகாணாமல் குமுறுமென் நிலையைமாற்ற
வேறேதும் துறைகாணாது வித்தகம் தடுத்திட்டாலும்
ஆறுதல் பெறலாமென்றே ஆண்டவன் தனைஎண்ணி
மாறுதலாய் கைகூப்பி மண்டியிட்டு அடிபணிந்தேன் !


மானிடத் தொகையனைத்தும் மந்தையாய்த் திரிந்தாலும்
நானிடர்ப் படுங்கால் தாங்காது அலறுகையில்
சூனியத்தின் உள்புகுந்து சோர்ந்திடவும் விரும்பாது
வணங்கவோர் நாயகனாய் சிவன்தனை யானேபெற்றேன் !

எழுதியவர் : சக்கரைவாசன் (14-Apr-16, 11:46 pm)
பார்வை : 57

மேலே