ஓவியமே
ஓவியம்தான் தீட்டினாயோ
காவியம்தான் படைத்திட்டாயோ
நீ விரும்பும் வண்ணம் வரைந்திட்டாயோ
நான் விரும்பும் வண்ணம் தந்திட்டாயோ.
ரோஜாவை கலந்தெடுத்து கலவை கலந்தாயோ
மாணிக்கத்தை கலைந்தெடுத்து
சலவை செய்திட்டாயோ
இனிதாய் இயல்பாய் இரவின் இலைகளினூடே
முத்தாய் மணியாய் முழுநிலவாய் வான்வெளியூடே
வானமென்னும் காரிகை தன்னவன் கைபட்டு மலர்ந்தாளோ
தூரிகையென்னும் உன்விரல் பட்டு சினுங்கி சிவந்தாளோ
நாளை வருவாளோ நாணத்தால் மறுப்பாளோ
மாலை கைகொண்டு காத்திருக்க வைப்பாளோ.