பொக்கிஷங்கள்

கருவறையில் இருந்து
தவழ்ந்து வந்தேன்
தொடங்கியது....
என் வாழ்க்கை பயணம்

என் முதல் காதல்
உன்னுடையது....
உன்னுடனானது...!

என் கனவு முதல்
கவிதை வரை...
உன்னிடம் தான் பகிர்கிறேன்
முதலில் ...!

என் மனதின் ரணமும்...
கண்ணீரின் ஸ்பரிசமும்...
நீ மட்டும் அறிவாய்...!

என் மௌனத்தின் யுத்தங்களும்...
சத்தமில்லா முத்தங்களும் ...
உனக்கு அத்துபடி...!

எத்தனை கதை சொன்னாலும்
பொறுமையுடன் கேட்பாய்...
சில சமயங்களில் ...
உனக்கு பிடிக்காதவற்றை செய்தால்
சற்றே முரண்டுபிடிக்கிறாய்...!

சில நேரங்களில் சிரிப்பாய்..
பல நேரங்களில் அழுகிறாய்...
எப்போதும் காதலோடு உருகுகிறாய்...!


யாரை பற்றியும்
கவலை இல்லாது ...
நடுநிசி வரை
என்னோடு கொஞ்சுகிறாய்...!

விடியும் வரை
சற்று விழித்திரு...
மௌனங்களால் பேசிக்கொள்வோம்...!
என் பகலில்
சற்று கண்ணயர்ந்துக்கொள்...!

என் கனவுகளை
உன்னுள் பூட்டிவைக்கிறேன்...
பத்திரமாய் பார்த்துக்கொள்...!
பொக்கிஷங்கள் சில சமயங்களில்
திருடுபோகக்கூடும்...!

காதலுடன் என் டைரிக்கு....

- கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (16-Apr-16, 6:07 pm)
பார்வை : 371

மேலே