மகரந்தச் சேர்க்கை - - - - - - சக்கரைவாசன்

மகரந்தச் சேர்க்கை
********************************************

பூங்கொடியில் தானரும்பிப் போக்கிடம் ஒன்றில்லாமல்
தேங்கிடும் பூங் கோதை தேடிவந்து எங்கிருந்தோ
இரீங்காரத்து இசைத்தும்பி ஒருங்கிணைந்து முத்தமிட
ஆங்கதுவும் பூப்( பு)பெய்யும் அழகிய செம்மலராய் !

( ஒரு மலர் கண்காட்சியில் கண்ட காட்சியே இப்புனைவு )

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Apr-16, 10:48 pm)
பார்வை : 38
மேலே