விடப்பாம்பும் சதிராடும் - - - - - சக்கரைவாசன்
விடப்பாம்பும் சதிராடும்
*************************************************
ஊர்வரக் கண்டெழும்பி தீப்பிழம்பு போல்கனன்று
சீறுகின்ற விடப்பாம்பும் சிந்தைகெட்டு தன்னெதிரே
மீறுகின்ற இன்னிசையாம் பிடாரனது மகுடிஇசைச்
சாறுஉண்டு சதிராடும் ! பித்தனின் பரவசம்போல் ! !
(தெருவினில் பாம்பாட்டி வித்தையினை காண நேர்ந்தபோது
எனக்குள் தோன்றியதே இந்த வரிகள் )