வறுமை
அழகிய வண்ணத்தோரணங்களால் வீட்டை அழகு படுத்தியிருந்தாள் ரமா..
அன்று ரமாவின் பையனுக்கு பிறந்த நாள்..
"கவிதா! என்னடி பண்ற.. காலையிலேருந்து நீயும் வேலை பார்த்துக்கிட்டுதான்
இருக்க.. ஆனா பாரு அதோ அந்த துணி அந்த இடத்துலேயே இருக்கு..",
என வேலைக்காரி கவிதாவை வேலை வாங்கிக்கொண்டிருந்தாள் ரமா..
"கவிதா! அய்யா வந்தவுடன் நானும் அவரும் சேர்ந்து போய் பக்கத்தில் இருக்கும் அனாதை ஆசிரமத்துக்கு நன்கொடையும் ஸ்வீட்டும் உணவும் கொடுத்துவிட்டு வந்து விடுகிறோம் ..."
"அதற்குள் குழந்தை சிவா எழுந்துவிட்டான்னா.. அவனை ரெடி பண்ணிவை..", என்று சொல்லிச் சென்றாள்...
"அம்மா அம்மா", என கவிதாவின் மகன் ஓடி வந்து "பசிக்குதும்மா..
எப்பம்மா சாப்பாடு தருவ?", என்றான்..
"இதோ முதலாளியம்மா வெளியில போயிட்டு வரட்டும்ப்பா..", என்று தன் வறுமையை நொந்து கொண்டாள்..