கல்விக்கண் திறந்த கர்மவிரரே .

கல்விக்கண் திறந்த கர்மவிரரே ...
உன்னை மீண்டும் என் கண் பார்க்க துடிக்கிறது

உன்னை போல் ஒரு தலைவன் இன்று வந்தால்
அவன் உன் தொண்டனாகத்தான் இருப்பான்

நல்லாட்சி தந்துட மீண்டும் மறுபிறவி எடுப்பயோ ..
உன் கருணை மழையால் இந்த தமிழகம் நனையதோ ..

மீண்டும் இங்கு வருவையானால் ...உனக்கு வழி தெரியுமோ இங்கு வந்து சேர ..

பூலோகம் வந்தவுடன் யாரிடமாவது கேள் .....

ஊழல் ,லஞ்சம் ,கொலை ,கொள்ளை,பதவி பேராசை மிகுந்த புண்ணிய பூமி எங்குள்ளது என்று
தமிழகத்துக்கு வந்து சேருவாய்............

முக்கிய குறிப்பு ஒன்றை சொல்லவிரும்புகிறேன்
வரும்போது உன் அடையாள அட்டையே
எடுத்துக்கொண்டுவா .,,ஏனால் உன்னை இங்கு மறந்த வர்கள் நிறையப்பேர்

எழுதியவர் : prabaz (19-Jun-11, 7:54 am)
சேர்த்தது : tamilan
பார்வை : 295

மேலே