வீரம்
வீரம் என்பது
மண்ணில் புதைக்கபடுவது அல்ல
மனதில் விதைக்கபடுவது !
வீரம் என்பது
போர்க்களத்தில்
பகைவர் கண்டு நடுங்குவது -பல
படைகளும் தூளாய் நசுங்குவது !
வீரம் என்பது
குடும்பத்தில்
தன்மானம் காத்து நிற்கும் -நம்மை
தகுதியோடு வாழவைக்கும் !
வீரம் என்பது
விளையாட்டில்
வெறியோடு ஆட வைக்கும் -பல
வெற்றிகளை ஈட்டி நிற்கும் !
வீரம் என்பது
மேடையில்
ஆற்றலோடு பேச வைக்கும் -பல
ஆட்சிகளை மாற்ற வைக்கும் !
மொத்தத்தில்
வீரம் என்பது
பயத்தை போக்க வைக்கும் -நம்
பலத்தை காட்ட வைக்கும் !