உடனே பன்னுங்க உடல் தானத்தை

மாயமென்ன சாயமென்ன...
எல்லாம் வெளுத்து போச்சு -இங்கே
கூட்ட விட்டு ஆவியும் பறந்தும் போச்சு
அத பாவி மனசு புடிச்சு வைக்க
துப்பில்லாம விட்டும் போச்சு. ..!

ஊர்க்கெலவி தாய்க்கெலவி ஒன்னா கூடுது..
என் சவமுன்னே ஒன்னா கூடுது. .
ஒய்யாரமாய் ஒப்பாரி வச்சு...
ஊருக்கே முரசு கொட்டுது...
இத முரசு கொட்டுது. ..

மாமெ மச்சா உறவெல்லாம்
கூட்டம் கூடுது...இங்க. ,
கூட்டம் கூடுது. ..-அவுக.,
முறையெல்லாம் பேசிப்பேசி
பொழுத கழிக்குது..

குழிக்குள்ள என்ன தள்ள திட்டம் தீட்டுது ..இங்கே திட்டம் தீட்டுது. ..

மறுவாழ்வு எனக்கில்லையா என
மனசு தவிக்குது -இந்தப்
பாவி மனசு தவியாய் தவிக்குது. ...
கெடந்து துடியா துடிக்குது...

கருவாடும் கறிக்கொளம்பும்
தின்னு வளந்த உடல .,
புலுவும் பூச்சியும் தின்பதா
என மனசு கருவுது - இந்தப்
பாவி மனசு கருவுது...!

உடல் தானம் செஞ்சிருந்தா...-இந்த
புகைச்சல் இருக்காது என
நிணைக்க தோனுது -என் மனசு
நிணைக்க தோனுது. .....!

"கண் போன பின் சூரிய நமஸ்காரம் "
இப்போ அழத்தோனுது..
இதனெனச்சு அழத்தோனுது...

என் மனசை தேத்திக்கிட்டேனுங்க-ஆமா
என் மனச தேத்திக்கிட்டேனுங்க....!
மறுபிறவி என்பது இருந்தா...
மறக்காமல் உடல் தானம் செஞ்சிபுட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கோனும்னு
தேத்திக்கிட்டேனுங்க...!

என் நெலம உங்களுக்கு வேனாமுங்க..!
போய் உடனே உடல் தானத்தை பன்னிபுடுங்க...!

-இப்படிக்கு மனசு. ..

எழுதியவர் : மோகன் சிவா (25-Apr-16, 2:15 am)
பார்வை : 98

மேலே