நினைவெல்லாம் காதல்
நினைவெல்லாம் மறந்ததடி
காதல் வந்து மோதுகையில்
பித்தமாகி போனதடி நீ நெஞ்சில் வந்து சேருகையில்
என் நெஞ்சினிலே உறங்குகையில் நேசம் வந்து கொஞ்சுதடி
கொஞ்சும் எந்தன் விழிகளிலே
உன் நேசம் என்னில் தஞ்சமடி
தஞ்சம் உன்னில் சேருகையில்
மஞ்சம் ஒன்று வந்திடுமோ
மஞ்சம் வரும் நேரம் தன்னில்
பஞ்சம் வரும் மோகம் தன்னில்