சிந்துப்பாடல் --- வளையற் சிந்து --- 2
கவிதைகளில் நனைந்திடலாம்
கவிவழியே இன்று -- வளர்
கலைகளிலே வென்று -- நம்
கருத்தினிலே சென்று -- தினம்
கனவுதனில் நனிமிகவே
கனிநிகராய் நின்று .
செவிதனிலும் கவிதைகளாம்
செயித்துவிடும் இங்கு -- மனம்
செப்பிடுமே அங்கு -- நலம்
செந்தமிழே தங்கு -- இனி
செருக்கிலாமல் முழங்குகவே
செவிகுளிரச் சங்கு .