கன்னித்தாயைகைம்பென்னாக்கும்தொடர்கதை

வீறுடைசெம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி
என சித்திரன் சான்றிய பெருமை
எம் செங்குருதி கலந்த செந்தமிழுக்குத்தான்
முதல் மாந்தன் முத்தமிழ் பால் குடித்து
அத்தமிழுக்கு முதல்இடையென தோல் கொடுத்து
ஊயிர் உந்ததாயை கொல்லென கடல் கோளிழுத்தும்
நின்ற ஊயிரை மூன்றாம் கடைச்சங்க மென்று
துளிர் விடுத்து ஈரெட்டுசெவ்வியல் தன்மைகளை
கொண்ட உயர் மொழி நம் ஊயிர்மொழி
அது தமிழ்மொழி
என்றுமுள தென்தமிழென துரைத்தது கம்பன் கவி
இதற்கொப்பிட்டொத ஏதுமில்லை இத்தமிழ்மொழிக் ஈடோர் புவியென
என் தமிழ்வளர்க்க அன்று தமித்தாய்
சேவகன்கள் எத்துனைப்பேர்….
தமிழ் தொன்மையை புடவியில் புற்றீசலென துறைத்தவனும் இருந்தான்
தனித்தமிழுக்கு உயிர்நீத்தோனும் நீத்தான்
புதையுண்டும் ஓர்கல்லறைத் தமிழ்மாணாக்கன் ஒருவன்
தமிழுண்டு பசி இராதமிழ்ச்சாணக்கியன் ஒருவன்
இப்படி
கைமண் கணவன் கொண்டிருந்தும் தமிழ் அன்று கன்னித்தமிழ்
உயிர் ஈந்து தமிழ் காத்த கணவன்கள் போக
கைம்பெண்ணாக்கி தமிழை அனுப்பி வைக்கிறார்கள் தினம்சாக
தமிழை கைம்பெண்ணாக்கியபாவம் இன்றைய தமிழனுக்கு ஏராளம் ஏராளம்
தொன்தமிழெனக் கூறியெதும் தோலுடல்கொண்டிருக்குமென
ஆங்கிலவேசியிடம் பாய்விரித்து போனவர்கள்
எத்துனைப்பேர் இன்று
மண்ணும் சரி தமிழ்ப்பெண்ணணும் சரி துயர் அறியும்
கைம்மைகுறித்து
கைம்மை கைம்பெண் கைம்பெண்நிலை
கைம்மைத்துயர் மறுமணம் ஏற்காகொடுமை யென
தமிழ்மாந்தனும் முன்டாசுவேந்தனும் கூறியது
மீளப்பெறா மறதி நோயால் போயிருக்கும் போல
தமிழுக்கு சுக ராகங்கள் பாடியபாடிய நாதரவெள்ளமெல்லாம்
ஏத்துனைப்பேருக்கு sir (Slave i Respect) சொல்லிக்கொண்டிருக்கிறது கைந்தமிழாக…….
மறு நினைவேற்றி
தமிழை தோரண வாயிலாக்கி
மற்றதை தோழன் வாயிலாக்கு
தமிழை நான்பேசாமல் வேறெந்த வாய்ப்பேசும்
என ஓர்ஊரைவீசு
கைம்மைக்கு கண்ணீர் துடைக்கவாவதுசெய்யலாம்……

எழுதியவர் : சிங்காரவேல் என்கிற கவிமல (27-Apr-16, 2:57 pm)
பார்வை : 94

மேலே