குழந்தை தொழிலாளர்

தலைக்குமேல் வெள்ளம்
சாணென்ன, முழமென்ன?
அறிவுப்பசியெடுக்கா மூளை,
உணவுப்பசி கேட்கும் வயிறு
வென்றதெதுவோ
தெரியாதவர்போல் மேலே
படிப்பீர்.....

முளைத்த பயிர்
விளையும் முன்பே,
பிஞ்சிலே சிலர் பரிப்பீர்...

எதிர்த்து யாரும்
கேட்டிட்டால் பிடறியிலே
அடித்து ஏளனமாய்
சிரிப்பீர்....

காலையிலே,
கோஷங்கள் பல போட்டு
வார்த்தையிலே
குழந்தை தொழிலாளர்முறை
ஒழிப்பீர்...

மாலையிலோ,
கடைவேலைக்கு சின்ன
பசங்க இருந்தா சொல்
என என்னிடமே
ஜோராய் நடிப்பீர்..

நானல்ல, நீயல்ல காரணம்
என நலுவிடுவீர்,
கால்காசு குறைச்சல் கூலி என
சொன்னால் மெதுவாய்
பல்லிளிப்பீர்...

குழந்தைகளை குற்றம் சொல்லி
பயனெதுவோ,
திருந்திடுவீர்...!
இல்லை திருத்தப்படுவீர்..!

-கலாம்தாசன்

எழுதியவர் : kalaamdhasan (27-Apr-16, 3:22 pm)
பார்வை : 67

மேலே