குழந்தை தொழிலாளர்

என் தோள்களுக்கு புத்தகத்தை சுமக்க ஆசை
சுமக்கிறேன் இன்று புத்தகத்தை அல்ல கற்களை....
என் கைகளுக்கு பேனாவை பிடிக்க ஆசை
பிடிக்கிறேன் இன்று பேனாவை அல்ல உளியை.....
என் கால்களுக்கு பள்ளிக்கு செல்ல ஆசை
செல்கிறேன் இன்று பள்ளிக்கு அல்ல தொழிற்சாலைக்கு.....
என் கண்களுக்கு கரும்பலகையில் உள்ள எழுத்தை காண ஆசை
காண்கிறேன் இன்று எழுத்தை அல்ல என் கண்களில் உள்ள வறுமையை.....
என் மனதுக்கு மருத்துவராக ஆசை
ஆனேன் இன்று மருத்துவராக அல்ல "குழந்தை தொழிலாளனாக"