இந்த கவிதைக்கு என்ன பெயர் வைக்க...???
வேலை இல்லை எனில் படிப்பும் சுமைதானே..!!!
நான் படிக்கும் போது தன் தூக்கத்தை ஒத்திபோட்டு
டீ- வைத்து கொடுத்த என் அன்னையிடம்
என்ன சொல்வேன்..?
பேருந்துக்கு பணம் கொடுத்து வழி
அனுப்பிவிட்ட தந்தையிடம்
என்ன சொல்வேன்..?
வரும்போது வெற்றியுடன்தான் வருவாய் என
வாழ்த்துக்கள் கூறிய அண்ணனிடம்
என்ன சொல்வேன்...?
பல முறை சுற்றி திரிந்திருக்கிறேன் இந்த
வெய்யிலில் ...! இதுவரை இருந்ததில்லை
இந்த மயக்கம்..!!
இப்போது என் கையில் சான்றிதழ்களுடன்
நடந்து வருகையில் தலை சுற்றுகிறதே..!!
இது என் உடலின் சோர்வல்ல.....!!
மனதின் சோர்வு..!!
வியர்வை வழிய துடித்தேன்...கசங்கியது
நேர்முக தேர்வுக்காக என் தங்கை
தேய்த்து கொடுத்த சட்டை..!!
நேர்முக தேர்வு முடித்து...
படிக்கும் காலம் வரை நன்கு
படித்தவன்தான் நானும் ..!!
முடித்து வெளி வருகையில்தான் தெரிந்தது
எனக்கு எத்தனை பேர் போட்டியென...!!
வீட்டுக்கு செல்லும் பாதை தெளிவாய்
தெரிந்தும் கால்கள் செல்ல மறுக்க
முயர்ச்சிக்கிறதே...!!
மனதின் வரட்சியோடு தொண்டை வரட்சியும்
சேர்ந்து கொள்ள.. குளிர்பானம் குடிக்க
ரோட்டோர கடை நாற்காலியில் அமர்ந்தேன்
சில நொடிக்கணம் முடிந்திருக்க எனது
தோள்களை தொட்டது ஒரு மிருதுவான விரல்
என் பக்கத்து வீட்டு சிறுவன்..
முகத்தில் மகிழ்ச்சியும், கையில்
கொடுக்கா புளியுடன் நின்றிருந்தான்
அண்ணா என....
எங்கள் தெருவில் உள்ளதோ....உயர்ந்த
ஒற்றை கொடுக்கா புளியமரம் ....
அறிந்துகொண்டேன் நான்..யாரேனும்
பறித்து கொடுத்தார்களா என கேட்க்க...?
இல்லை அண்ணா நானே பறித்தேன்
என பதில் வர பிரமிப்புதான் எனக்கும்
மீண்டும் உற்சாகமாய் தொடர ஆரமித்தான்
தொடர்ந்து அடித்து கொண்டிருந்தேன்
ஒரு தருணத்தில் விழுந்து விட்டது என்றான்
வெற்றியின் களிப்புடன்..!!
அந்த சில நொடிகள் எனக்கு மாறினானோ
அவன் ஆசானாக..!!!
எனது மனதை சுற்றி வளைத்த சோக
கரு மேகம் துளியாய் மறைந்து போனதே
புது உற்சாகம்....
எழுந்து தெம்பாய் நடக்க ஆரமித்தேன்
நாளை முதல் என் வாழ்வில் மாற்றம்
நிச்சயம் என்ற கனவுகளோடு...!!!!