முதுமைக்கு முதன்மை...
முதுமைக்கு முதன்மை
அடி அடியாய் எடுத்து வைக்கச் சொல்லித் தந்தார்கள்,
தத்தித் தத்தி எடுத்து வைத்து நன்று நடக்கத் துவங்கினோம்,
இன்றோ பல மைல்கள் நடந்து, பல மைல்கற்களை அடைந்து,
மீண்டும் தத்தித் தத்தி நடக்கத் தான் நம்மால் முடிகிறது இன்றோ,
ஆனால் அடி அடியாய் நடத்திச் செல்ல செல்வங்கள் இல்லை அருகில்,
அவர்களோ நாம் கண்ட செல்வத்திற்கு அருகில், செல்வம் செல்வத்துடன் தான் சேருமோ?
இளமையில் சுற்றல்,
முதுமையில் பிதற்றல்,
செல்வங்களை போற்றுங்கள்,
சேர்த்த செல்வத்தில் பகுதியை,
முதுமைக்கு பேணுங்கள் - கொஞ்சம் எண்ணுங்கள்,
செல்வத்திற்காக செல்வங்கள் நம்மருகே இருக்க வாய்ப்புண்டே...
வளர்த்த விதம், வளரும் விதம், வளர்ந்த விதம் - அனைத்தும் நன்றே,
ஆனாலும் மாறி வரும் சூழ்நிலைகளில் அவர்களை குறை கூறி பயனில்லை,
முதுமையில் செல்வச் சுதந்திரம் கொண்டோமானால் செல்வங்களையும் கொள்வோம் அன்றோ?