தம்பியுடையான்

அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில்
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம்
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட
அம்மாவும் அப்பாவும்..

எழுதியவர் : ஜி ராஜன் (29-Apr-16, 8:41 pm)
பார்வை : 75

மேலே