இருள் --- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
காரிருள் கவ்வியக் கானகத்தில் கன்னியவள்
மாரியில் நின்றபடி மான்விழிக் காத்திருக்கப்
பாரினில் வந்தப் பரவசமாம் நாளும்நம்
ஊரினில் சொன்ன உலகு .
இருளின் அணைப்பினில் ஈடிலா இன்பம்
தருவது முற்றத்தின் தண்ணொளித் தீபம்
வருவதைக் கொள்வோம் வரமெனச் செல்வோம்
உருவதைச் செய்வோம் உணர்வு .
மாலை மயங்குகின்ற மாசிலா வேளையில்
காலை அரும்பும் கமலத்தின் புன்னகைச்
சோலை ,முழுதுமாய்ச் சொந்தங்கள் தேடிடுமாம்
பாலை இருளிலும் பார் .
பார்த்தவுடன் நீங்கிடுமாம் பாரில் பசலையும்
வார்த்தைகள் போக வசந்தமும் வீசிடும்
கார்காலச் சூழலில் காத்திருக்கும் காளையும்
சீர்பெறவும் வாழ்வினில் சீர் .
நிலவொளித் தந்திடும் நீண்ட இரவின்
மலரொளிக் காதலி மங்கிடும் நேரம்
உலவிடும் மோகம் உணர்வின் இருளில்
பலவிதக் காட்சியும் பார்த்து .