சொல்லாமலே
என்னவளின் பாதச் சுவடுகளை நான் பார்த்ததில்லை .!
அவளின் முகவரியை நான் கேட்டதில்லை !
அவள் என் கனவு தேசத்தின்
கவிதை மாளிகையில் வாழ்கிறாள்
.என் நேசத்தை அவளிடம் சொன்னதில்லை நான் !
அவளும்தான் .
வார்த்தைகளிலா
இருக்கிறது வாழ்வின் உயிர் ?
அவள் அனபின் ஆக்டபஸ் பிடியை நான் விரும்புகிறேன் !
உறங்கும்வரை உட்கார்ந்து அடம்பிடிக்கும் அவள் நினைவுகளை என்னசெய்ய ?
தொலைவில் இருந்தும்
தூங்கவிடாமல் செய்யும் வித்தை
அவளுக்குத் தெரிந்திருக்கிறது !
மனதின் கரையில் ஓயாமல் வீசும் அலையாய் அவள் வந்துகொண்டிருக்கிறாள்
அவள்
மாயக் குரலில் மயங்கியபடி விழித்துக் கொண்டிருக்கிறேன் நான் !