நங்கைக் கருள்வாய்
நீரின் நீந்தி வானெழும் நிலவம்,
பாங்கியைக் கண்டு பார்விட் டகலும்;
நெஞ்சுள் நிறைந்த நின்முகம் நீங்க,
கண்ணுள் பொருந்திய தண்ணொளி நீங்கி,
உண்டி மறுத்தனள் உடல்கடி மெலிந்தனள்!
நாளும் காணும் நங்கை யாங்கென
பார்விட் டகலா பனிவெண் ணிலவம்,
நாள்செல் லினும்காண் பரிதிக் கிடமில்!
எல்லியைக் காணா நன்னீர்ச் செவ்விதழ்
கொண்டது வண்டினை தன்னுள் கொடுஞ்சிறை;
இறவா இரவின் புரியா மருட்கை!
ஏதில் வண்டிணைக் கருள
நங்கைக் கருள்வாய் நாவாய்க் கரசே!