கனா கண்டேன் தோழி

கனவுகள் காணும் நேரம்
என் விழியே உன்னை
கனவினில் காணும் நேரம் !

நிஜங்களும் தொலைந்திடும் தருணம்
என் அழகே உன்னை
அருகினில் காண நேரும் !

சொல்ல துடித்த பலவும்
பொன்மயிலே உன் முன்னால்
சொல்லி பதிலையும் அது தேடும் !

தவத்தின் முயற்சிகள் அனைத்திற்கும்
என் உயிரே
பரிசாய் நீயே கிடைத்தாய் !

காத்திருத்தல் சுகமாய் தோணும்
என் அன்பே
உந்தன் வருகையில்
என் ஆன்மாவும் பரிசுத்தமாகும் !

பாசம் முழுவதும் காட்டி
என்னவளே
உந்தன் நேசம் நாளும் வளர்ப்பேன் !

பெற்றவர்களின் சம்மதத்தில்
என் உயிரே
நம் திருமணமும்
சுபமாய் முடிந்தே போகும் !

உண்ண நீயும் மறுத்தால்
மான்விழியே
உந்தன் தாயாய் மாறி நானும்
உணவை ஊட்டி மகிழ்ந்தே இருப்பேன் !

உந்தன் முதல் பிரசவ தருணத்தில் தானே
என் அன்பே
எந்தன் உயிரும் அலறி துடிக்கும் !

நாம் இருவர் நமக்கு இருவர்
என்றே நாளும் வாழ்வில்
சந்தோசம் நிலைத்தே செல்லும் !

இது போல் நம் வாழ்வில் நடந்திட
என் தோழி
நிஜத்தினில்
உந்தன் மனதை நீயும்
பறிகொடுத்தால் என்ன ! !

எழுதியவர் : தங்கதுரை (4-May-16, 1:40 pm)
Tanglish : kanaa KANDEN thozhi
பார்வை : 491

மேலே