கதிரவன் எழுகிறான்

கதிரவன் எழுகிறான்
மசண்டையிலே

ஏனோ அவனுக்கு
அவசரம் .

உறங்க முடியவில்லை
போலும்

எழும் போதே அவனுக்கு
வேகம்

அசாத்தியமான் வேகம்
ஏனோ?

பலபலவென்று விடியும்
என்பதற்கு மாறாக

பளபளவென்று தெரிகிறது
வானம் அதி காலையிலே


பகட்டுகிறான் கதிரவன்
ஏனோ?


போகப் போக கொளுந்து
விட்டு ஒளி வீசுகிறான்.


திறமையைக் காட்டுகிறானோ?
இருக்கலாம்.


ஓய்வு ஒழிச்சல் இன்றி சுட்டெரிக்கிறான்
சாயும் பொழுது வரை.


என்ன விளையாட்டோ இது ?
புரியவில்லை .


கடுமை என்று சொல்ல
மனம் வரவில்லை

கொடுமை என்று கூற
மனம் இடம் தரவில்லை .


ஒரு வேளை பழிக்குப் பழி
இருந்துவிடுமோ ?


வினை விதைப்பவன்
வினை அறுப்பான்

என்பது முதுமொழி
அதற்கு ஈடாக

நாம் மாசுபடுத்தியதற்கு
இணையாக


இன்று இயற்கை
செயல் படுகிறதோ?

பதிலுக்குப் பதில்
நடத்துதோ?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-May-16, 8:26 am)
பார்வை : 2039

மேலே