உன் நிழல் உன்னைப் போலில்லை - கற்குவேல் பா

உன் நிழல்,
உன்னைப் போலில்லை ..

ஆம், அதற்கு
என்னைப் பிடித்திருந்தும்,
பிடிக்கவில்லையென்று ,
பொய் பேசத் தெரியாது ..

இதயத்தில்
காதலை சுமந்து கொண்டு,
பார்வையில்,
நெருப்பை அள்ளி வீசத் தெரியாது ..

சீறிடும் வெயிலிலும்,
ஜில்லென்ற மழையிலும்,
என் அருகாமையை,
வெறுத்திட விரும்பாது ..

பயணசீட்டு பரிசோதகரிடம்,
மாட்டிக் கொண்ட தருணத்திலும்,
பார்த்து சிரித்து,
பயணத்தை தொடராது ..

ஆயிரம் கவிதைகள்,
பேசி உறவாட வேண்டியிருந்தும்,
இல்லையென்று,
மௌனம் சாதிக்கத் தெரியாது !

உன் நிழல்,
உன்னைப் போலில்லை ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (6-May-16, 5:13 pm)
பார்வை : 70

மேலே