மழை

துளியே மழைத் துளியே
விண்ணின் கருநீல விழியே
அவ்வழியே வரும் ஆனந்தக்கண்ணீரோ – நீ !

அலையலையாய் மழையாய் வருவாய்
பொங்குமின்பம் தண்ணீராய்த் தருவாய்
கழனிகள் வளங்களில் செழிப்பாகவோ !

ஓடையாய் மண்ணின் ஆடையாய்
வாடையாய்த் தென்றலில் வருவாய்
உள்ளங்களின் பள்ளங்களை இன்புறவைக்கவோ !

புறந்தூய்மை உன்னால்தானே கிட்டும்
சினங்கொண்ட மனித மனங்களில்
அகந்தூய்மை ஓங்குவது எந்நாளோ !

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (9-May-16, 3:45 pm)
Tanglish : mazhai
பார்வை : 62

மேலே