சிந்துப்பாடல் --- காவடிச்சிந்து - வகை 2 -- 6
கண்களால் பேசிடு வாயே -- காதல்
காவியம் செப்பிடு வாயே -- தினம்
கனவாயுனை மணமேதர தினமேயுனை நினைவேனினி
கண்ணே -- அழகு பெண்ணே .
பண்களால் வாழ்த்திடு வேனே -- நாளும்
பாரினில் நின்றிடு வேனே -- உயர்
பலனேதர நிகரேயிலை உறவேவர சினமேவிடு
பந்தம் -- நீயென் சொந்தம் .