அரக்கர்களின் கையில் ஜிப்மர் மருத்துவமனை

அரக்கர்களின் கையில் ஜிப்மர் மருத்துவமனை

மனிதனின் மறுபக்கம் எவ்வளவு கொடியதாய் இருக்கும் என்பதனை நேற்று (10.05.2016) ஒருநாள் சம்பவம் எனக்கு ஆழ புரிய வைத்திருக்கிறது . ஆம் , விபத்தில் அகால மரணமடைந்த ஒரு ஏழை இளைஞனின் சடலத்தை வைத்து சம்பாத்தியம் நடத்தும் ஒரு அரக்க கூட்டத்தை கண்டு மனம் சற்று அரண்டே போய் இருக்கிறது .மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் இப்படிப்பட்ட மிருக குணம் கொண்டவர்களும் இருப்பார்களா என்று நினைக்கையிலே பிரமிப்பாய் இருக்கிறது . நாகப்பட்டினம் மாவட்டம் , மாதளம் , கிராமத்தை சேர்ந்த இளைஞன் சுரேஷ் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் கொண்டுவந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விடுகிறார் . அவரின் சடலத்தை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து மீட்க்க நடந்த போராட்டம்தான் கொடுமை .

அந்த கிராமத்தில் மிகச்சிறிய கூரை வீட்டில் வசித்துவந்திருக்கிறார் சுரேஷ் . தாயை சிறுவயதினிலே இழந்த சுரேஷ் தன் கூடப்பிறந்த தம்பியையும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இழந்திருக்கிறார் . ஒரு தங்கை மற்றும் குடிப்பழக்கமே கதியாய் இருக்கும் தந்தை . இந்த நிலையில்தான் சுரேஷ் விபத்தில் காயமடைந்து இறந்து விட்டார் .

புதுவை ஜிம்பர் மருத்துவமனையில் பிரேத அறையில் இருந்த சுரேசின் உடலை பிரோத பரிசோதனை செய்ய அங்கு பணிபுரியும் டாக்டர் கேட்டது ருபாய் 2000/. எவ்வளவு எடுத்து கூறியும் கேபதாய் தெரியவில்லை . கொடுத்தால் பிரோத பரிசோதனை விரைந்து நடக்கும் . இல்லாவிட்டால் கடையில்தான் என்று பணியில் உள்ள டாக்டர் மூஞ்சில் அடித்தமாதிரி கூறிவிட்டு உள்ளே போய்விட்டார் . காசை பார்த்தால் நீரம் வீணாவதோடு உடலில் நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும் என்கிற காரணத்தால் அங்கு வந்த சுரேஷ் உறவினர் முன்வந்து ருபாய் 2000/- கொடுத்துவிட்டார் .

ஒருவழியாய் பிரோத பரிசோதனை நடந்தேறியது . அடுத்ததாக பிரோத பரிசோதனை செய்த உடலை ஊருக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் கேட்க்க சென்றோம் . அவர்கள் கூறிய தொகை தலையே சுற்றிவிட்டது . புதுவையில் இருந்து சிதம்பரத்தை அடுத்துள்ள மாதாலம் கிராமத்திற்கு சுமார் 85 கிலோமீட்டர் இருக்கும் . போவதும் வருவதும் சேர்த்து பார்த்தால் 170 கிலோமீட்டர் தான் . 12 * லிட்டர் பெட்ரோல் * 60 ரூபாய் என்று கனகிட்டாலும் 720 ரூபாய்தான் . டிரைவர் கூலி + வண்டி வாடகை என்று எடுத்துக்கொண்டால் கூடுதலாக 1500 . மொத்தமாக சேர்த்தால் 2220 வரும் . ஆனால் அவர்கள் மனசாட்சியே இல்லாமல் கேட்ட தொகை 7500/-.

எவ்வளவு பேரம் பேசியும் குறைக்க முடியவில்லை . சரி வெளியில் இருந்து அம்புலன்ஸ் எடுத்து வரலாம் என்றாலும் அதற்க்கு அவர்கள் விடமாட்டார்களாம் . வெளி அம்புலன்ஸ் வந்து ஜிப்மரில் பிணம் ஏற்றினால் கண்டிப்பாக பிரச்சனை செய்வோம் என்று ஜிப்மரில் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்கள் ஒரே அடாவடி , பிரச்சனை . கடைசியில் சண்டை சச்சரவுகளுக்கு பின்பு ஒருவழியாக 5500/- வாடகைக்கு அம்புலன்ஸ் பேசி சுரேசின் பிணத்தினை மாதாலம் கிராமத்திற்கு கொண்டு சென்றோம் .

சிலநூறுகள் பணத்திற்கே போராடும் சுரேசின் குடும்பம் இந்தமாதிரி செலவுகளை எப்படி சமாளிக்கும் .
குடும்பத்திற்கு ஆதாரமாய் இருந்த ஒரு இளைஞனை இழந்து வாடும் குடும்பம் இன்னுமொரு கூடுதல் நெருக்கடி இது .

இதையெல்லாம் விட கொடுமை என்னவென்றால் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு 2000-மும் + அம்புலன்ஸ் வாடகைக்கு 5500-ம் கொடுத்து எடுத்து சென்ற சுரேசின் பிரேதம் இடுகாட்டுக்கு பயணித்தது எதில் தெரியுமா தோழர்களே ....................

வெறும் தென்னன்கீத்தில் நெய்யப்பட்ட கை பாடையில்தான் தோழர்களே ...............




பணம் பணம் என்று மனிதர்களின் நிலையினை அறியாத சுய நல பேய்களின் அடைக்கல கூடமாய் ஆகிவிட்டது புதுவை ஜிப்மர் மருத்துவமனை , என்பதனை மிகுந்த வேதனையோடு கூறிக்கொள்கிறேன் -ஒரு பத்திரிக்கயாளனாய் .


இப்படிக்கு

கவிஞர் .வினாயகமுருகன்
ஆசிரியர்
விடுதலை குரல் வார இதழ்

எழுதியவர் : வினாயகமுருகன் (11-May-16, 9:35 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 226

சிறந்த கட்டுரைகள்

மேலே