கண்ணம்மாவின் விளையாட்டு

தோப்புக்குள்ளே பனைமரமாம்
எதிரெதிரே நிக்குது
முகம் பார்த்து பேசுது,
உன் முகத்தைக் கொஞ்சம் காட்டாயோ
கண்ணம்மா..........
என் கண்ணம்மா.
நான் என்ன பனைமரமா
வேலியோரத் தனிமரமா
நேரங் காலம் இல்லையெனத்
தள்ளித்தள்ளிப் போனீரே
கண்ணாளரே..........
என் கண்ணாளரே.
இப்போ முகம் காட்டக் கேட்பது,
இப்போ முகம் காட்டக் கேட்பது
ஏனையா..........
என் கண்ணையா.
உனக்காகத்தான் ஒன்னு நான் வாங்கி வந்தேனே,
உனக்காகத்தான் ஒன்னு நான் வாங்கி வந்தேனே
பாரம்மா..........
இங்கே பாரம்மா.
என் விளையாட்டுத் தான் அது,
கண்ணே
என் விளையாட்டுத் தான்.
அனலடிக்குது பார்வையில் கொஞ்சம்
தள்ளி வையம்மா
கோவத்தை
தள்ளி வையம்மா.
இந்த கொஞ்சலுங் கெஞ்சலுக்காகத்தான்
காத்திருந்தேனே
நான் காத்திருந்தேனே,
இது என் விளையாட்டுத் தான்
கண்ணாளரே..........
இது என் விளையாட்டுத் தான்.
- செ.கிரி பாரதி.