இரசனையின் சாயல்

பயணமாய்
பேருந்தில் ........

ஜன்னல் ஓர
இருக்கை .....

இயற்கையின்
வண்ணம்
தூறலும்
துயகாற்றும்
துரத்தி
கொண்டே வர
மனம்
இலேசாகி
இரசிகையானது
இயற்கையிடம் ......

திரும்பி
பார்த்தேன்
படமாய்
இரசிக்கின்ற
கைபேசியும்
கணினியுமாய்
அனைவரும்
இருக்க
கவலைப்பட
செய்தது
என்னை .....

இயற்கையை
இயல்பாய்
இரசிக்காமல்
இருப்பதற்கு ............

எழுதியவர் : ப்ரீத்தி சு (12-May-16, 2:22 pm)
பார்வை : 131

மேலே