தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 36 - = 102
“நரைச்சமுடி கிழவன் டைய்யடிக்கிறான்
டைய்யடிச்சி வந்து டாவடிக்கிறான்..”
“பட்டுவண்ணச்சிட்டு முத்தம் குடுக்கிறா
முத்தம் குடுத்துப்புட்டு துட்டுக்கேட்குறா..”
ராணிபேட்டை ரவிக்கைகாரி
பனங்கல் பார்க்கு வந்திருந்தா
பனங்கல் பார்க்கில் என்னைப்பாத்து - உன்
குணங்கள் என்னன்னு விசாரிச்சா !
ராயப்பேட்டை ரங்கசாமி
டைடல் பார்க்கு வந்திருந்தான்
டைடல் பார்க்கில் என்னைப்பாத்து
ஊடல் புரிய தூதுவிட்டான் !
இருபது வயதில் அறுபது கலைகள்
அன்றாடம் நான் பயின்று வந்தேன்
அறுபது வயதிலும் குறும்பு போகல – இது
இரும்பு உடம்பா என்று மலைக்கிறேன் !
நரைச்சமுடி கிழவன் டைய்யடிக்கிறான்
டைய்யடிச்சி வந்து டாவடிக்கிறான்..”
“பட்டுவண்ணச்சிட்டு முத்தம் குடுக்கிறா
முத்தம் குடுத்துப்புட்டு துட்டுக்கேட்குறா..”
சைதாப்பேட்டை சாந்தம்மா
என்ன நீ சவுக்கியமா ?
சாய்ங்காலம் வந்தாக்கா
ஜமுக்காளம் நனைய ஜல்சாதான் !
தேனாம்பேட்டை தென்னவனே
தென்சென்னை மன்னவனே
தாலாட்ட நீ இருக்க
தலைக்கோதி சுகம் தருவேன்
இருபது வயதில் அறுபது கலைகள்
அன்றாடம் நான் பயின்று வந்தேன்
அறுபது வயதிலும் குறும்பு போகல – இது
இரும்பு உடம்பா என்று மலைக்கிறேன் !
நரைச்சமுடி கிழவன் டைய்யடிக்கிறான்
டைய்யடிச்சி வந்து டாவடிக்கிறான்..”
“பட்டுவண்ணச்சிட்டு முத்தம் குடுக்கிறா
முத்தம் குடுத்துப்புட்டு துட்டுக்கேட்குறா..”