வாக்காளர்கள் சிந்திக்க -01

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
என்று சொல்லிக் கொக்கரித்தான் பித்தன்..
மரணம் சொல்லியது..
காதலில்தானே ஒளித்துவைத்துள்ளாய்
காதலை நான் ஒளித்துவைத்துவிட்டேனே
தப்பானவற்றுள்
என்ன செய்யப் போகிறாய்...

வாக்காளர்களே சிந்தியுங்கள்
உங்கள் காதலை எங்கே வைத்துள்ளீர்கள்..
இலவசங்களிலா
மதுவிலா
ஊழலிலா
எளிதாகக் காரியமாற்றிக் கொள்வதிலா..
இல்லை..நேர்மையிலா...!!!!
=== ===

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (13-May-16, 9:38 am)
பார்வை : 145

மேலே