இணையில்லா காதல் இணையுமா

அவளின்
நகர நாகரிகத்துக்கும்
எனது
வெள்ளந்தி கிராமியத்துக்கும்
முளைத்த காதல்....
அவளின்
நாகரிக இதயத்துக்கும்
எனது
பாமர இதயத்துக்கும்
முளைத்த காதல்...
அவளின்
காரோடு குளிரும் சுடிதாருக்கும்
எனது
சேறோடு நெகிழும் வேட்டிக்கும்
முளைத்த காதல்.....
அவளின்
நகர ஓங்கிசைக்கும்
எனது
கிராமிய மெல்லிசைக்கும்
முளைத்த காதல்....
அவளின்
கல்லூரிப் படிப்புக்கும்
எனது
பள்ளிதாண்டா படிப்புக்கும்
முளைத்த காதல்...
அவளின்
மாளிகை வாழ்வுக்கும்
எனது
கூரை வாழ்வுக்கும்
முளைத்த காதல்..
இணையில்லா காதல்தான்
எதிலுமே
இணையில்லாத காதல்.
புரியவில்லை எனக்கு.
காதலுக்கு கண்ணில்லையா
அல்லது
இப்படி கோணல்மாணலாய்
காதல் விதை தூவிவிட்டு
புலம்பலில் தவிக்க வைக்கும்
கடவுளுக்குத்தான் கண் இல்லையா..?