தினம் ஒரு பாட்டு இயற்கை - 7 = 103

“கதிரவன் ஒரு நாள் மேற்கே உதித்தால்
புவியில் என்ன நிகழும் ? பூவே !
இப்புவியில் என்ன நிகழும் ?”

சாத்திரங்கள் தலைகீழாய் மாறும்
கிழக்கு ரத்தக்கண்ணீர் வடிக்கும்
வானம் மேற்கை கிழக்கென்று பறைசாற்றும்
ஊரூசனம் கூடிநின்று அதிசயிக்கும்

கதிரவன் ஒரு நாள் மேற்கே உதித்தால்
புவியில் என்ன நிகழும் ? பூவே !
இப்புவியில் என்ன நிகழும் ?

மலைகளின் அரசியாய் இதுவரை
உதகை அன்னை இருந்து வருகிறாள்
அவள் ஆட்சியை கலைத்து சூரியன்
மலைகளின் அரசனாவான் !
இனி அவன் இராட்சியத்தில்
யாரும் சோம்பேறிகளில்லை;
சோம்பேறிகளைக் கண்டால்
உடனே சுட்டெரித்து விடுவான் !

கதிரவன் ஒரு நாள் மேற்கே உதித்தால்
புவியில் என்ன நிகழும் ? பூவே !
இப்புவியில் என்ன நிகழும் ?

மலையை முத்தமிட வரும் மேகம்
வெப்பம் தாளாமல் வெகுதூரம் ஓடும்
போர்வை போர்த்த வரும் பனிமூட்டம்
போர்த்துவதற்குள் கரைந்துப் போகும்
தூங்கு மூஞ்சி மரங்களெல்லாம்
இனி தூக்கமின்றி தவிக்கும்
கர்ஜிக்கும் மிருகங்ளெல்லாம்
இனி கப்ஜிப்பென்று இருக்கும்
மொத்தத்தில் இயற்கை அன்னை
நிச்சயமாய் வாழா வெட்டியாவாள் !

கதிரவன் ஒரு நாள் மேற்கே உதித்தால்
புவியில் என்ன நிகழும் ? பூவே !
இப்புவியில் என்ன நிகழும் ?

எழுதியவர் : சாய்மாறன் (13-May-16, 12:34 pm)
பார்வை : 66

மேலே