தேர்தல் - துளிகள்

*********

சூடான டீ
சுடச்சுட அரசியல்
தேயுது தினமும் டீக்கடை பெஞ்சுகள்!

**********

ஓட்டுக்கு நோட்டு
வாங்கியவரைப் பார்த்து
சிரிக்கிறார் காந்தி!

************

அலைமோதும் அரசியல்வாதிகள்
அமைதியாய் வாக்காளர்கள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிசயம்!

*************

ஓட்டு கேட்கும் படலம்
ஓங்கி ஒலிக்கும் ஓலம்
பற்றி எரியும் சாதீ!

**********

கிடைத்தது கோழிப்பிரியாணி
கலைந்தது கூட்டம்
கட்சிக்கொடிகள் காலுக்கு கீழே!

***********

சந்தி சிரிக்கும் விவாதங்கள்
முந்தி வரும் ஊழல்கள்
உற்றுநோக்கும் ஊடகங்கள்!

**********

சுண்டி இழுக்கும் பிரச்சாரம்
கண்கவர் அறிவிப்பு
தள்ளாடுகிறார் நடுநிலைவாதி!

***********

கிளம்புகிறது புழுதி
ஒன்றையடி பாதையிலே நுழைய பார்க்கிறது
ஒன்பது கார்கள்!

**********

காதுகிழியும் இரைச்சல்கள்
உருவாகும் உறவுமுறைகள்
கரையுது கரையான்கள்!

**********

அநாதை பிச்சைக்காரனுக்கு கிடைத்தது
ஆளுங்கட்சி வேட்டியும்
எதிர்கட்சி துண்டும்!

************


((((வாக்களிப்பது நமது உரிமை
அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்.)))

- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (13-May-16, 5:44 pm)
பார்வை : 1089

மேலே