துளிக் கவிதைகள்

உறக்கம் வராது
புரண்டு படுக்கும்
தெருவோரச் சிறுவன்
மனதில் சுற்றிச்
சுற்றி வருகிறது
திருவிழாவில் அவனால்
சுற்ற முடியாது போன
இராட்டினம்
********************************
பேசப்பட வேண்டிய
விடயங்கள்
பேசாது ஒதுங்கி நிற்க
இரைச்சல்களால்
நிரம்பியிருக்கிறது
கேட்போர் கூடம்.
**************************************
எழுந்து போய்
திறக்க முன்பு
உள்ளே நுழைந்து
கொள்கிறது கனவு
உறக்கத்தோடு
விடியும் வரை
உரையாட
***************************************
நினைவுகளின்
நெடுஞ்சாலை வழியே
நிரற்படுத்திய
ஞாபக வண்டிகளில் பயணம்
கூடவே எழுதிக்கொள்ள
கவிதையும்
தழுவிக்கொள்ள
தனிமையும்
************************************

எழுதியவர் : சிவநாதன் (14-May-16, 2:04 am)
பார்வை : 135

மேலே