கடைக்கார ரங்கனும் இரு திருடர்களும்

ஒரு டீக்கடை முன்பு இரண்டு திருடர்கள் அமர்ந்து மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்,

டேய் ராக்கியப்பா இன்று அந்த கடைக்காரன் ரங்கன் ஏதோ வியாபார விசயமாக அவன் குடும்பத்தோடு இன்று இரவு பட்டனம் போகிறானாம் ,

அதற்கு இன்னொரு திருடன் ,ஆமாம் நானும் கேள்வி பட்டேன் நந்தா , அப்படியானால் நாம் இன்றிரவு அந்த கடைக்காரன் ரங்கன் வீட்டில் புகுந்து நகைகள் பணம் அனைத்தையும் கொள்ளையடித்து விடலாம் ,

என்று இரண்டு திருடர்களும் பேசிக் கொண்டதை அந்த வழியாக சென்ற கடைக்காரன் ரங்கன் கேட்டு விட்டான்,

உடனே திருடர்களுக்கு தெரியாமல் , கடைக்காரன் ரங்கன் ஊரைக் கூட்டி இந்த திருடர்கள் இத்தனை நாளாக நம் கண்ணில் மண்ணை தூவி கொண்டிருந்தனர் இன்று நாம் அவர்களை எப்படியும் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்தனர் ,

அதன் படி ஊர் மக்கள் எல்லோரும் கடைக்காரன் ரங்கன் வீட்டையும் கடையையும் இரவு முழுவதும் கண்காணித்து கொண்டிருந்தனர் ,

வெகு நேரமாகியும் திருடர்கள் வரவேயில்லை

இரவு கழிந்தது ,காலை சூரியன் உதித்தது

எப்படியோ கடைக்காரன் ரங்கன் வீட்டை பாதுகாத்து விட்டோம் என அனைவரும் அவரவர்களது வீட்டிற்குச் சென்ற போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

இருதிருடர்களும் திட்டம் தீட்டி ஊர் மக்களனைவரையும் ஓர் இடத்தில் இருக்க வைத்து விட்டு அந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்த பணம்,நகைகள்,விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்


எப்படியோ இதில் நம்ம வீடு மட்டும் தப்பியது என்று சந்தோசப்பட்டுக் கொண்டான் கடைக்காரன் ரங்கன்
- விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (14-May-16, 10:21 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 137

மேலே