ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சுட்டபோதும்
சுவை தந்தது
சோளக்கதிர் !

புறம் முள்ளாக
அகம் இனிக்கும் சுளையாக
பலா !

அருகே முள்
ஆனாலும் மகிழ்ச்சி
ரோசா !

வேறு இல்லை
இணையான மலர்
செம்பருத்தி !

உருவமின்றியே
அசைத்தன கிளைகளை
காற்று !

இல்லை தண்ணீர்
உண்டு வரலாறு
பழைய கிணறு !

தெரிந்தது
குளத்தில்
நகரும் மேகம் !

துளிர்த்தது
பட்ட மரம்
நல்ல மழை !

வெடித்தது பஞ்சு
வருத்தத்தில்
இலவு காத்த கிளி !

பணிவே சிறப்பு
வளைந்து நின்றது
விளைந்த கதிர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-May-16, 10:14 am)
பார்வை : 188

மேலே