மதுவை ஒழித்து
பள்ளிப் பருவத்தில் முறையாய்
பள்ளிக்கு நான் சென்றிருந்தால்...
தோல்வியுற்று படிப்பைப் பாதியிலே
விட்டிருக்க மாட்டேன்!
தந்தை பேச்சைத் தட்டாமல்
கேட்டிருந்தால்... என்றென்றும் நான்
என் கல்வியையும் மதிப்பையும்
இழந்திருக்க மாட்டேன்!
நியாயத்திற்கு அஞ்சி நான்
தவறான கொலை கொள்ளை என
செய்யாதிருந்தால்... கொடிய சிறைக்கும்
செல்லாது இருந்திருப்பேன்!
படித்து பட்டம் பெற்று நான்
நல்ல வேலைக்குச் சென்றிருந்தால்...
அந்தஸ்தில் எப்போதும் உயர்ந்த
இடத்தில் இருந்திருப்பேன்!
வாழ்வில் என்றும் கல்வி அவசியம்!
என்றும் நல்ல நண்பர்கள் அவசியம்! - பெற்றோர்
சொற்கேட்டு நல்வழி நடப்பதும்; மதுவை
ஒழித்து நன்மக்களாதலும் மிக அவசியம்!!