சிந்துப்பாடல் -- காவடிச் சிந்து
காதலின் நெஞ்சத்தில் கண்மணி -- நாளும்
காத்திருப் பாயடி பெண்மணி -- நீயும்
காலங்கள் மாறினும் பொன்மணி -- என்றும்
கதியாயெனை மதியேநினை பதியாயெனை மறவாயெனை
கண்களால் பேசிடும் கண்மணி -- நம்
காதலும் கூடிடும் பொன்மணி .
சாதலை மாற்றுவாய் கண்ணாலே -- என்றும்
சாத்திரம் பேசுவாய் பண்ணாலே -- நாளும்
சாற்றிடும் உண்மைகள் பின்னாலே -- தினம்
சரியாயெனை மனமேஎன வரமேதர உறவாயினி
சந்ததி ஏற்போமே முன்னாலே -- இனி
சத்தியம் சொல்லுவேன் உன்னாலே .