தேர்தல் மாதம்
தெருவெல்லாம் பிரச்சார ஊர்திகள்
இருசக்கர வாகனங்களில் எல்லாம்
கரை வேட்டி கட்சித் தலைவர்கள் !!!!!!!!!!!
பரபரப்பான பணப்பட்டுவாடா
சாலைகளி லெல்லாம்
மகிழுந்து சோதனை !!!!!!!!!!!!
மேமாதம் முழுவதும்
ஓய்வற்ற தேர்தல் அதிகாரிகள்
மாவட்டத்திற்கு ஒரு
மாவட்ட ஆட்சி தலைவர்
தங்கள் மாவட்ட தேர்தல் பணிகளை
கவனிக்க ,பூத் சிலிப்புகளைக்
கொடுக்க ,ஊழலைத் தடுக்க
என அரசு அதிகாரிகள்
தலை விரித்தாடியக் கோலம் !!!!!!!!!!!!!!!!!!!
ஐந்து வருடத்திற்குப் பின்பு
விருந்தினர்போல், தான்
போட்டியிட்ட தொகுதிக்கு
வழியைத் தேடிச் செல்லும்
உள்ளூர் வேட்பாளர் !!!!!!!!!!!!!
தொலைக் காட்சி பெட்டியைத்
திறந்தால் கரடியாய்க் கத்தும்
கட்சியின் முதன்மை அமைச்சர்கள் !!!!!!!!!!!!!!!!!
அரைமணி நேர நாடகத்தை
ஐந்து நிமிட நேரமாக்கி
ஆட்சி சீர் குலைவை
அம்பலப்படுத்தும்
அரசியல் கட்சிகள் !!!!!!!!!!!!!!1
செய்தித்தாளை எடுத்தால்
கருத்துக் கணிப்பால்
காணாமல் போன
உண்மை நிலவரங்கள் !!!!!!!!!
வீதிக்கு வீதி துண்டு
பிரசுரங்கள்
வீட்டுக்கு வீடு
தலைவர்கள் வருகையின்
எதிர்பார்ப்புகள் !!!!!!!!!!!!!
இப்படி இந்த தேர்தல்
மிக சுவையாக
சுட சுட இருந்தது
மேலும் , நம் எழுத்து தள
கவிதைகளுடன் !!!!!!!!!!!!!!!!