மே18

மே.18
எமது சகோதரங்களின் இரத்தம் ஆறாக
பெருக்கெடுத்தோடிய நாளின்று.

எம்மினம் மீது. கொத்துக்குண்டுகள் வீசி.
கொத்துக் கொத்தாய் கொன்று தின்று
ஏப்பம் விட்ட. நாளின்று.

இனவெறிப் பேய்களும் பிசாசுகளும்.
தமிழனின் பிணத்தை தின்று பெருமை
கொண்ட நாளின்று.

லட்சம் உயிர்களை கொன்று. தமிழனின்.
உணர்வுகளை காவு கொண்ட நாளின்று.

எமது சகோதரங்களின் கைகளையும்
கால்களையும் கட்டிப்போட்டு துடிக்கத்
துடிக்க சுட்டுக் கொன்ற நாளின்று.

எங்கள் சகோதரிகளின் நிர்வாணக்
காட்சிகளை உலக நாடுகள் பார்த்து
ரசித்த நாளின்று.

அரை உயிர் பிணங்களாய் இருந்து.
ஐயோ ஐயோவென ஒப்பாரி வைத்து
உலக நாடுகளிடம். தமிழன்.உயிர்ப்பிச்சை.
கேட்ட நாளின்று.

எப்படி மறக்க முடியும் இந்நாளை?
மறக்க முடியாத கொடூர நாளல்லவா ?

எழுதியவர் : (18-May-16, 6:44 pm)
பார்வை : 69

மேலே