முத்தமிட்டன

அடிவானில்
அவன் சாய்ந்திட
நீரே இல்லாது
சில மீன்கள் நீந்திட
தவழும் தென்றல் காற்றில்
பூக்கள் மயங்கிட
என்றோ?...
வந்துப் போன நிழல்கள்
மீண்டும்
இந்நிலம் பூத்தன......


படபடவென
சிறகுகள் அடித்தாலும்
மெல்ல பறந்து செல்லும்
பட்டாம்பூச்சியாய்
பாதங்கள்
அளந்தாற் போன்று
அடியெடுத்து வைத்தன......


சுவடுகள்
பதிந்த சில நாழிகையில்
என்ன நேர்ந்ததோ?...
நின்றன கால்கள்...
மோதின
மோகன விழிப் பார்வைகள்......


நேற்று
நடந்த நிகழ்வென
ஓர் உணர்வு
இரு உள்ளத்திலும்...
காற்றின் அலை வரிசையில்
கண்கள் நான்கும்
ஏதோ?... பேசின......


வகிடில்லாது தலை
வதனம் தரும் புன்னகையில்
அவனும்
நேர் வகிடெடுத்து
நெற்றியில் பொட்டு வைத்து
அவளும்
நலம் கேட்டு பக்கத்தில்
தேகம்
நகர்ந்து சென்றன......


அந்நாளின்
சுகமான நினைவுகளை
புன்னகையித்து
அசைப் போட்டு
அருகருகே கால்கள்
அங்கு பயணித்தன......


உரசிய
சிறு தீப்பொறிகளில்
பற்றி எரியும் வைக்கோலாய்
இரு விரல்களின்
திடிர் உரசலில்
இளமேனிகளும்
பற்றி எரிந்தன......


பார்க்கும்
விழிகளில் ஏக்கம்...
பேசும்
மொழிகளில் தயக்கம்...
மௌனமே
மனங்கள் இரண்டையும்
மௌனமாய்
பிய்த்து திண்றன......


வெண் மேகங்கள் திரண்டு
கார்முகிலாய் இணைந்து
மின்னலின் சிரிப்பில்
இடியின் ஓசையில்
கொட்டித் தீர்த்த மழைக்கு
பின் வரும் அமைதி
இங்கேயும்
சற்று நேரம் நிலவின......


வருடம் பல
தவமிருந்து
வரம் வாங்கி வந்தும்
ஏனிந்த அமைதி...
தூரம் எறிந்து
ஆனந்தக் கடலில்
ஆசையாய் கலந்து
நெஞ்சங்கள்
உறவாடி நனைந்தன......


உன்னை
மீண்டும் பார்ப்பேனோ?...
பேச முடியுமோ?...
நான் ஏங்கிய நாட்கள்
எண்ணற்றவை......


உன்னை
பாராமல் போவேனோ?...
பேசாமல் சாவேனோ?...
நான் பயந்த நாட்கள்
கணக்கில்
அடங்காதவை......


இரு
இருதயங்களின்
பக்கங்கள் புரட்டப்பட்டு
ஒவ்வொரு
வரிகளும் படிக்கப்பட்டு
ஒவ்வொரு
வார்த்தையும் பகிரப்பட்டன......


முதல் நாள்
சந்திப்பில்
கட்டித் தழுவி
முத்தம் பதித்த இதழ்கள்...
இன்றும்......

எழுதியவர் : இதயம் விஜய் (18-May-16, 6:29 pm)
Tanglish : muthamitana
பார்வை : 149

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே